Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
சிட்னி விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணும் கருவிலிருந்த குழந்தையும் மரணம்
18/11/2025 Duration: 02minசிட்னி Hornsby விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப்பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 18 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
17/11/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
மாறுகண்ணை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?
17/11/2025 Duration: 09minCrossed eyes- மாறுகண் என்பது பலரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இது ஏன் ஏற்படுகிறது என்பது பற்றியும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
‘தமிழ் சமூகம் தொழில் முனைவோரை உருவாக்க தவறியதே வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம்‘ -‘Kissflow’ சுரேஷ்
17/11/2025 Duration: 17minசுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2
-
செய்தியின் பின்னணி : உணவு பொருட்கள் மீது Health Star Rating கட்டாயமாக்கப்பட வேண்டுமா?
17/11/2025 Duration: 06minஉணவு உற்பத்தியாளர்கள் 70% பொருட்களில் Health Star Rating HSR-ஐ பயன்படுத்த வேண்டும் என நான்கு ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 37% பொருட்களில் மட்டுமே HSR பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 17 நவம்பர் 2025 - திங்கட்கிழமை
17/11/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 17/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
16/11/2025 Duration: 09minபீகார் மாநில சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி; ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து. 9 பேர் பலி; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
எளிய பின்னணியுடன் பல மில்லியன் டாலர் நிறுவனத்தை எப்படி உருவாக்கினேன்? –‘Kissflow’ சுரேஷ்
16/11/2025 Duration: 15minசுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 1
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (9 – 15 நவம்பர் 2025)
15/11/2025 Duration: 07minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (9 – 15 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
மெல்பன், சிட்னி, கான்பரா நகரங்களை இணைக்கும் புதிய நேரடி பேருந்து சேவை
14/11/2025 Duration: 02minஐரோப்பாவில் பிரபலமான பயணிகள் பேருந்து சேவை நிறுவனம் Flixbus ஆஸ்திரேலியாவிலும் கால்பதிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நியூசிலாந்தில் வேலை செய்வதற்கான இரண்டு புதிய விசாக்கள் அறிமுகம்!
14/11/2025 Duration: 02minநியூசிலாந்து அரசு, Accredited Employer Work விசாவின் கீழ் இரண்டு புதிய பருவகால வேலை விசாக்களை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
This form of discrimination is growing in Australia - from assault to segregated birthday parties - ஆஸ்திரேலியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு இருக்கிறதா?
14/11/2025 Duration: 07minExperts say caste discrimination and the practice of ‘untouchability’ are on the rise in Australia. But some South Asians are fighting back. - ஆஸ்திரேலியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் ‘தீண்டக்கூடாதவர்’ என்ற நடைமுறை அதிகரித்து வருகிறது. ஆனால் சில தெற்காசியர்கள் இதற்கு எதிராக போராடி வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
செய்தியின் பின்னணி : நாம் வாங்கும் உணவு பொருட்களில் மறைந்திருக்கும் ஆபத்து!
14/11/2025 Duration: 08minநாட்டில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களை ஆராய்ந்ததில் பலவற்றில் இன்னும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்துறை ட்ரான்ஸ் கொழுப்புகள் இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி
-
குழந்தைகள் தமிழ் கற்பது பெற்றோரின் கையில் இருக்கிறதா அல்லது குழந்தைகளுக்கும் பங்கு உண்டா?
14/11/2025 Duration: 16minஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோரோடு ஒரு சந்திப்பு. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரின் பெற்றோரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு. இதில் கலந்து கொண்டவர்கள்: ஸ்ரீநிதி, சுகந்தி, நித்யா, வள்ளிப்பன், ராஜேஷ், மூர்த்தி ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
What are Australia’s fishing laws and rules? - நீங்கள் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கச் செல்பவரா? இத்தகவல் உங்களுக்கானது!
14/11/2025 Duration: 08minThinking of going fishing in Australia? Make sure you are familiar with local regulations, including licensing systems, closed seasons, size limits, permitted gear, and protected species. - ஆஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்தல் என்பது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதை பலர் அறியாமல் இருக்கலாம். உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து, மீன்பிடிக்க உரிமம் தேவையா இல்லையா, தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் மீன்பிடிக்கக்கூடாத பருவங்கள், அளவு வரம்புகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் போன்ற விடயங்களுக்கு வெவ்வேறு விதிகள் பொருந்தும். இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 14 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
14/11/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 14/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
13/11/2025 Duration: 08minவடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு படைத்தரப்பு காரணம் என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டை ஆளுந்தரப்பு மறுக்கிறது; புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை வெளியேற்ற அரச உயர் மட்டத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்தோம் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
சூடானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவது தொடர்வது ஏன்?
13/11/2025 Duration: 10minசூடானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, நிலைமை மிக மோசமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சூடானில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
13/11/2025 Duration: 06minஇந்தியா, பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; காசா நிலவரம்; மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள்; G20 மாநாட்டை புறக்கணிக்கும் அமெரிக்கா; மலேசியா- தாய்லாந்து எல்லை அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு விபத்து; லிபியா குடியேறிகள் படகு விபத்து: 42 பேர் பலி; ஈராக் தேர்தல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியாவிலிருந்து விடைபெறுகிறது Menulog!
13/11/2025 Duration: 02minஆஸ்திரேலியாவில் தனது வணிகத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக Menulog அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.