Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
10/07/2025 Duration: 07minகாசா பேச்சுவார்த்தை; செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்; அமெரிக்காவில் பெரு வெள்ளம்; ஐரோப்பியாவில் வெப்ப அலை; பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி- டிரம்ப் எச்சரிக்கை; கென்யாவில் தீவிரமடையும் போராட்டம்; துருக்கிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
தங்கத்தாத்தா
10/07/2025 Duration: 05minஇருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் தந்த பெரும் புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். ஈழத்தமிழ் கவிதை வரலாற்றில் சிறுவர்பாடல்களால் முக்கியத்துவம் பெற்று “தங்கத்தாத்தா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் நினைவுதினம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் அவர் விட்டுச்சென்ற இலக்கியங்கள் தமிழ் வாழும்வரை வாழ்ந்து கொண்டே இருக்கும். “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
எதற்கும் கவலைப்படுபவரா நீங்கள்? ஆபத்து காத்திருக்கிறது!
10/07/2025 Duration: 10minஉளவியல் நோய்களில் ஒன்றான PTSD என்று அழைக்கப்படும் Post Traumatic Stress Disorder அதிர்ச்சிக்கு பின் ஏற்படுகின்ற மன அழுத்த கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் மனநல மருத்துவராக பணியாற்றும் டாக்டர் துரைரட்ணம் சிவரூபன். அவரோடு உரையாடுபவர் செல்வி
-
காளான் சமைத்து மூவரைக் கொன்ற Erin Pattersonனின் பின்னணி என்ன?
10/07/2025 Duration: 09minவிக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்து மூன்று பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Erin Patterson யார் அவரின் பின்னணி என்ன? இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
பூர்வீகக் குடி மக்களுக்குத் தொலைநோக்குப் பார்வை
10/07/2025 Duration: 12minஇது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. 2015ஆம் ஆண்டின் Australian of the Year விருதுக்கான தேர்வில் மேற்கு ஆஸ்திரேலியாவில் இறுதிச் சுற்றில் தேர்வு பெற்றவரும், Australian e-Health Research Centreஇல் ஆராய்ச்சியாளராகவும், Harvard பல்கலைக்கழகத்திலும் Notre Dame பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றும் பேராசிரியர் கனகசிங்கம் யோகேசன், பூர்வீக மக்களுடன் கண்பார்வை குறித்து தனது செயற்பாடுகள் பற்றியும் NAIDOC வாரம் குறித்த தனது கருத்துகளையும், 2015ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
-
மருந்துகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தால் அது ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?
10/07/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
அமெரிக்கா மருந்துகள் மீது இறக்குமதி வரி விதித்தால் அது ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?
10/07/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
புரதச்சத்து, குறிப்பாக வயதான பெண்களுக்கு ஏன் மிகவும் முக்கியம்?
09/07/2025 Duration: 12minபுரதச்சத்து உடலுக்குத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊட்டச்சத்தாகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடல் செல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, வயதான பெண்களுக்கு புரதச்சத்து ஏன் முக்கியம், நமது உணவில் அதனை எவ்வாறு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
புரதச்சத்து, குறிப்பாக வயதான பெண்களுக்கு ஏன் மிகவும் முக்கியம்?
09/07/2025 Duration: 12minபுரதச்சத்து உடலுக்குத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊட்டச்சத்தாகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடல் செல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, வயதான பெண்களுக்கு புரதச்சத்து ஏன் முக்கியம், நமது உணவில் அதனை எவ்வாறு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
NSW அரசு 250 டொலர்களுக்கு புதிய Washing Machine வழங்குகிறது!
09/07/2025 Duration: 02minவாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டொலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தை NSW அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
DonateLife வாரம் 2025: நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் கதை
09/07/2025 Duration: 11minஉடல் உறுப்பு மற்றும் திசு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ள வாரம், DonateLife வாரம் ஆகும். இந்த ஆண்டு, ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை DonateLife வாரம் நடைபெறுகிறது. இந்த முக்கியமான வாரத்தின் ஒரு பகுதியாக, விக்டோரியா மாநிலத்தின் Robinvale என்ற இடத்தில் வாழும் பீஜே குடும்பத்தின் எழுச்சியூட்டும் பயணத்தை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
-
NAIDOC: பூர்வீகக்குடி மக்களின் சிறப்பைக் கொண்டாடும் வாரம்!
09/07/2025 Duration: 07minNAIDOC வாரம் (National Aboriginal and Islanders Day Observance Committee வாரம்) ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடியின மக்களின் பன்முகத்தன்மையும், அவர்களது கலை, கலாச்சாரம், சமூக பங்களிப்புகளும் கொண்டாடப்படும் முக்கியமான வாரமாகும். இந்த ஆண்டு NAIDOC வாரம் ஜூலை 6 முதல் 13ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
09/07/2025 Duration: 07minகடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து; ரிதன்யா தற்கொலை விவகாரம்; பாஜகவுடன் கூட்டணி- அதிமுகவின் விளக்கம்; சிவகங்கை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்; இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தொடர்ந்து கூறும் டிரம்ப்; மிசோரமில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
காவல் துறையில் நிறவெறி உள்ளது என ஒப்புக்கொண்ட NT காவல்துறை தலைவர்!
09/07/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
09/07/2025 Duration: 07minகடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து; ரிதன்யா தற்கொலை விவகாரம்; பாஜகவுடன் கூட்டணி- அதிமுகவின் விளக்கம்; சிவகங்கை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்; இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தொடர்ந்து கூறும் டிரம்ப்; மிசோரமில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
NSW ரயில் பயணிகளுக்கு இரு நாட்கள் இலவச பயணச்சலுகை!
08/07/2025 Duration: 02minநியூ சவுத் வேல்ஸ் அரசுக்கும் ரயில் தொழிற்சங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு மட்டுமான இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
08/07/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
$1.5 மில்லியன் செலவில் காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டதை அரசு நியாயப்படுத்தியது
08/07/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
விக்டோரியாவில் மூவரைப் பலியெடுத்த நச்சுக் காளான்: Erin Patterson குற்றவாளி என தீர்ப்பு
07/07/2025 Duration: 02minவிக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
'கீழடியின் தொன்மை – உலகத் தொல்லியல் நிபுணர்கள் ஏற்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கேள்வி கேட்கிறார்கள்'
07/07/2025 Duration: 13minபத்தாவது உலக தொல் பொருள் மாநாடு (WAC-10), ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டார்வின் நகரில் நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,200ற்கும் மேற்பட்ட தொல் பொருள் ஆய்வாளர்கள் நேரடியாகவும், மற்றும் சுமார் 3,000 பேர் இணைய வழியாகவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தமிழ்நாடு தொல்லியல் துறையின் நிர்வாக இயக்குனர் இராமலிங்கம் சிவானந்தம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.