Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 52:29:28
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • புதிய அமைச்சர்கள்: லேபர் கட்சியின் caucus கூட்டம் வெள்ளிக்கிழமை

    06/05/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • NSW ஓட்டுநர்களைக் கண்காணிக்க ஆரம்பித்துள்ள Point-to-point கமராக்கள்!

    06/05/2025 Duration: 02min

    நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் இரண்டு பெரும் நெடுஞ்சாலைகளில் average speed கமராக்கள்/ Point-to-point speed கமராக்கள் ஊடாக அனைத்து ஓட்டுநர்களின் வேகமும் கண்காணிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

    06/05/2025 Duration: 03min

    ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல்தடவையாக தனது சொந்த தேர்தல் தொகுதியில் தோல்வியடைந்த எதிர்க்கட்சித் தலைவராக பீட்டர் டட்டன் ஆன பிறகு, லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அனைத்து முடிவுகளும் தெரியும்வரை புதிய அமைச்சரவையை அறிவிக்கமாட்டேன் - பிரதமர்

    06/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • தேர்தல் முடிவுகளும் அதன் பின்னணியும்

    05/05/2025 Duration: 08min

    கடந்த சனிக்கிழமை நடந்த ஃபெடரல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடந்த பிரச்சாரங்கள், கணிப்புகள், மற்றும் நடைபெற்ற தேர்தல் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை எதிர்க்கட்சி தலைவராக Sussan Ley இருப்பார்

    05/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    05/05/2025 Duration: 09min

    கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்தியா முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான 'நீட்'; சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடியை பிரதமர் மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு; உச்சகட்ட மோதலில் திமுக மற்றும் தமிழக ஆளுநர்; தமிழகத்தை உலுக்கிய இரட்டை கொலை; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • லேபர் வெற்றி, லிபரல் தோல்வி: தமிழர்கள் சிலர் என்ன நினைக்கின்றனர்?

    04/05/2025 Duration: 13min

    ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முடிவை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்வியை சிலரிடம் முன்வைத்தோம். தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நேற்று (ஞாயிறு) நடத்திய சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்துகொண்ட அனகன்பாபு, கார்த்திகா, நிமலேந்திரன், முனைவர் பாலு விஜய் ஆகியோர் பதில் தருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது முக்கிய கட்சிகள் முன்வைத்த கொள்கைகளை நமது நேயர்களுக்காக விளக்கிய ஆஸ்திரேலிய அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் எழுதிவரும் முரளி அவர்களும், ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • தொடரும் லேபர் கட்சியின் ஆட்சி: விரிவான பார்வை

    03/05/2025 Duration: 07min

    ஆஸ்திரேலியாவில் நேற்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்று லேபர் ஆட்சி தொடர்கிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    02/05/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (27 ஏப்ரல் – 03 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 03 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • 16 ஆண்டுகள் விட்டுப் பிரிந்த மனைவியுடன் இணைவதற்கு, நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிகேந்தன்

    02/05/2025 Duration: 11min

    அடுத்த நிதியாண்டில் நிகர குடிவரவு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று இரு பெரும் அரசியல் கட்சிகளும் கூறியுள்ளதால், குடிவரவு என்பது ஒரு முக்கிய பேசு பொருளாக இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த, புகலிடம் கோரிய நிகேந்தன் சித்திரசேகரம் உட்பட, குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்குக் காத்திருப்பவர்களுக்கு அந்த செய்தி கவலையளிக்கிறது. தனது அவலநிலை மற்றும் அவரது விருப்பங்களைப் பற்றி, நிகேந்தன் மனம் திறந்து பேசுகிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    02/05/2025 Duration: 08min

    உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சனி நள்ளிரவுடன் நிறைவு; நாடு முழுவதும் நடைபெற்ற மே தின நிகழ்வுகள்; இந்தியாவின் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • நாளை நடக்கவிருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல்! கடைசி நாள் பிரச்சாரத்தில் தலைவர்கள்

    02/05/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 02 மே 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • என்ன சொன்னார்கள்? ஐந்து வார தேர்தல் பிரச்சாரத்தின் தொகுப்பு

    02/05/2025 Duration: 07min

    பெடரல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் கடந்த ஐந்து வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய கட்சிகள் முன் வைத்த திட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    02/05/2025 Duration: 08min

    இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வரும் போர் பதற்றம்; அமெரிக்கா - உக்ரைன் இடையே ஏற்பட்ட கனிமவள உடன்பாடு; காசாவில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்வெளி தாக்குதல்; சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; அமெரிக்கா- வியட்நாம் போர் நிறைவின் 50ம் ஆண்டு நினைவு; அமெரிக்கா ஈரான் இடையே அணுசக்திப் பேச்சுவார்த்தை உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • கோலாகலமாக ஞாயிறு சிட்னியில் சித்திரைத் திருவிழா!

    01/05/2025 Duration: 07min

    தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 4) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. தமிழ் நாட்டிலிருந்து நாட்டுபுற இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவயர் கர்ணன் மற்றும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன்பாபு (தொலைபேசி: 0402 229 5517) ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். நடைபெறும் இடம் & நேரம்: Blacktown Leisure Centre, Stanhope gardens, NSW 2768. Time: 10 Am – 6 PM.

  • Follow the money: how lobbying and big donations influence politics in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் பெரிய நன்கொடைகள் அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன?

    01/05/2025 Duration: 09min

    Experts say a lack of transparency leaves Australians unaware of "undue influences" at play across all levels of government. - ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பெரிய நன்கொடைகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசின் அனைத்து மட்டங்களிலும் தேவையற்ற பண செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து மக்கள் அறியாமலேயே இருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SBS Examines-இற்காக Fernando Vives மற்றும் Rachael Knowles இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • சுஜாதா 90: தமிழ், அறிவியல், திரை, இலக்கியம் குறித்த நேர்முகத்தின் மறு பதிவு

    01/05/2025 Duration: 17min

    பல்லாயிரக்கணக்கான தமிழ் எழுத்தாளர்கள் இருந்தாலும் “சுஜாதா” அவர்கள் தனித்துவமானவர். இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும், வகைகளிலும் எழுதி குவித்தவர் சுஜாதா. அறிவியலை எளிமைப்படுத்தி, ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்தியாவின் 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' விருது வழங்கி கெளரவித்தது. இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்கிய மிக முக்கிய பொறியாளர் சுஜாதா. பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான சுஜாதாவின் 90 ஆவது பிறந்த தினம் மே 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுஜாதா அவர்கள் 2008 ஆண்டு மறையும் முன்பு 2005 ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு பதிவு இது.

  • ‘லிபரல் கட்சியின் கொள்கைகள் இவை’ - Jacob Vadakkedathu (Liberal)

    01/05/2025 Duration: 06min

    மலையாளி பின்னணி கொண்ட ஜேக்கப் வடக்கெடத்து அவர்கள் ஆஸ்திரேலிய தலைநகர் ACT யிலிருந்து லிபரல் கூட்டணியின் செனட் வேட்பாளராக போட்டியிடுகிறார். பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் குடியேற்றத்தைக் குறைத்தல் உள்ளிட்ட லிபரல் கட்சிக் கொள்கைகள் குறித்து அவருடன் உரையாடுகிறார் SBS மலையாளம் ஒலிபரப்பின் Deeju Sivadas.

  • நான்கு வங்கிகளின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தரவுகள் களவாடப்பட்டன!

    01/05/2025 Duration: 08min

    ஆஸ்திரேலிய மக்களில் 31,000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி தொடர்பான Passwordகள் திருடப்பட்டுள்ளன. Computers, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றவர்களை குறிவைத்து அவர்களின் passwordகள் ஒட்டு மொத்தமாக திருடப்படுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றைசெல்.

page 1 from 21