Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 91:35:44
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • ஜூலை 1 முதல் புதிய சாலை விதிகள் – ஒரு தவறு $1600 வரை அபராதமாகலாம்

    26/06/2025 Duration: 06min

    2025 ஜூலை 1ம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    26/06/2025 Duration: 07min

    ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம்; காசா- இஸ்ரேல் போர்; நேட்டோ உச்சி மாநாடு; கென்யாவில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம்; காங்கோ ஜனநாயக குடியரசு- ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்; நைஜீரியவிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட சிற்பங்களை திருப்பி அளித்த நெதர்லாந்து; சீனாவில் வெள்ள பாதிப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • Centrelink கொடுப்பனவு மற்றும் வரி தொடர்பில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் எவை?

    26/06/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் – அதாவது புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. குறிப்பாக Centrelink கொடுப்பனவு மற்றும் வரி தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • பெற்றோர் விடுப்பு தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் எவை?

    26/06/2025 Duration: 03min

    ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் – அதாவது புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. குறிப்பாக Paid Parental Leave மற்றும் Parental Leave தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • ஜுலை 1 முதல் Superannuation-இல் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றம் என்ன?

    26/06/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் – அதாவது புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. குறிப்பாக Superannuation எனப்படும் ஓய்வூதிய சேமிப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பணியிட உரிமை தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • எந்த சூப்பர்மார்க்கெட்டில் விலை குறைவு? சாய்ஸ் ஆய்வு முடிவு

    26/06/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/06/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • அமெரிக்காவின் போர்களில் ஆஸ்திரேலிய Pine Gap உளவு நிலையத்தின் பங்கு என்ன?

    25/06/2025 Duration: 10min

    ஈரானின் அணு சக்தி ஆய்வு நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய bunker buster குண்டுத்தாக்குதலில் ஆஸ்திரேலியாவின் Alice Springs எனுமிடத்திற்கு அருகில் Pine Gap என்ற இடத்தில் இயங்கும் Joint Defence Facility Pine Gap எனப்படும் ஆஸ்திரேலிய - அமெரிக்க கூட்டு செய்மதித் தொடர்பு மற்றும் உளவு கண்காணிப்பு நிலையம் பயன்பட்டிருக்கலாம் என்ரு Greens கட்சி கூறுகிறது. இந்த பின்னணியில் Pine Gap நிலையம் பற்றிய தகவலை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்தம்: அடுத்தது என்ன?

    25/06/2025 Duration: 09min

    ஈரான்- இஸ்ரேல் இடையே ஒரு பலவீனமான போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    25/06/2025 Duration: 08min

    தமிழ்நாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு குறித்த சர்ச்சை; போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது; ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்; ஒடிசாவில் பசு பாதுகாப்பு பெயரில் தலித்துகள் மீது தாக்குதல்; ஈரான், இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • வீடு வாங்குகின்றவர்கள் வீடு வாங்கித்தர Agentஐ வைத்துக்கொள்ளலாமா?

    25/06/2025 Duration: 16min

    வீடு வாங்குகின்றவர்களும் தங்களுக்கு ஒரு Agentஐ வைத்துக்கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. வீடு வாங்குகின்றவர்கள் தங்களுக்கு வீடு வாங்கித் தருவதற்கு ஒருவரை ஒப்பந்தம் செய்வதில் இருக்கும் நன்மைகள் என்ன, எந்த அம்சங்களில் நாம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்றும் விளக்குகிறார் Hallmark Buyers Agency எனும் நிறுவனத்தை நடத்திவரும் திலீப்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து வீடு விற்பனை அல்லது வாங்குதல் குறித்த நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • 100க்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இஸ்ரேலிலிருந்து மீட்பு

    24/06/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/06/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • மேற்கு ஆஸ்திரேலியாவில் புறாவைத் துன்புறுத்திய மூவருக்கு 130,000 டொலர்கள் அபராதம்

    24/06/2025 Duration: 02min

    மேற்கு ஆஸ்திரேலியாவில், புறாவைத் துன்புறுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்களுக்கு 130,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • ‘இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம்’ – அமெரிக்க அதிபர்

    24/06/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • அமெரிக்காவின் Bunker buster குண்டுகள் : ஈரானின் அணுசக்தி நிலைகள் முற்றாக அழிக்கப்பட்டதா?

    23/06/2025 Duration: 10min

    ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு Bunker buster என்ற மிக சக்திவாய்ந்த குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. இந்த Bunker buster குண்டுகள் பற்றியே எல்லா ஊடகங்களும் இப்போது பேசுகின்றன. இந்த குண்டுகளின் ஆற்றல் என்ன என்பது உட்பட இன்னும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றேனுகா துரைசிங்கம்.

  • Your guide to snow trips in Australia - ஆஸ்திரேலியாவின் பனிமலைகளைப் பார்க்கப்போகிறீர்களா? இதோ உங்களுக்கான பயண வழிகாட்டி

    23/06/2025 Duration: 10min

    Australia may be known for its beaches, but its snowfields offer unforgettable winter experiences—whether you're skiing, tobogganing, throwing snowballs, or seeing snow for the very first time. In this episode, we’ll guide you through everything you need to know for a snow trip, from what to pack and where to go, to how to stay safe, warm, and ready for fun. - பனிப்பொழிவைப் பார்க்கச்செல்லும்போது என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் எப்படி கதகதப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    23/06/2025 Duration: 09min

    இந்தியா முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினம்; தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தல்; மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு - தமிழக அரசியலில் ஏற்படுத்தும் பரபரப்புகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • நாம் சாப்பிடும் எந்த பழங்கள், காய்கறிகளில் பூச்சிகொல்லி மருந்தின் அளவு அதிகம்?

    23/06/2025 Duration: 11min

    சூப்பர் மார்கெட் எனப்படும் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் pesticides என்ற பூச்சிக் கொல்லிமருந்துகளின் residue என்ற எச்சங்கள் அல்லது வீழ்படிவு ஓரளவு இருக்கும். ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் இந்த residue – எச்சங்களின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வின் முடிவுகளை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • தக்காளி கட்டுப்படியாகாத விலையில். தட்டுப்பாடு எப்போது நீங்கும்?

    23/06/2025 Duration: 06min

    பல்பொருள் அங்காடிகளில் தக்காளி பற்றாக்குறையாக உள்ளது, அதன் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது மட்டுமன்றி, சில வாரங்களுக்கு அதன் கையிருப்பு மிகவும் குறைந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஈரான் மீதான தாக்குதலுக்கு Northern Territoryயிலுள்ள செய்மதி தளம் உதவியதா?- கிரீன்ஸ் கட்சி கேள்வி

    23/06/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • மிகவும் அதிக சம்பளம் பெறும் ஆஸ்திரேலிய CEOக்கள் இவர்கள்தான்!

    21/06/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் ASX-பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் CEO - தலைமை நிர்வாக அதிகாரிகளின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

page 5 from 36