Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
02/07/2025 Duration: 08minதமிழகத்தில் காவல்துறை விசாரணையின் போது இளைஞர் உயிரிழப்பு; அதானி நிலக்கரி சுரங்கத்திற்காக வெட்டப்பட்ட 5000 மரங்கள்; இத்தாலி பேஷன் ஷோவில் இந்திய கைவினை செருப்புகள்; இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு; தெலுங்கானா மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து; சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
மத்திய கிழக்கு பதற்றம் ஆஸ்திரேலியப் பயணிகளை எவ்வாறு பாதிக்கக்கூடும்?
02/07/2025 Duration: 12minமத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக அப்பகுதிகள் வழியாக செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தொடரும் இந்த பதற்றம் விமான பயணிகளுக்கு எந்த வகையான பாதிப்புகளை கொண்டுவரும் அதனை பயணிகள் எவ்வாறு சமாளிக்கலாம் போன்ற கேள்விகளுக்கு கடந்த 23 வருடங்களாக பல Helloworld பயண நிறுவனங்களை நடத்தி வரும் யோஹான் சிவா அவர்கள் வழங்கும் பதில்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
மத்திய கிழக்கு பதற்றம் ஆஸ்திரேலியப் பயணிகளை எவ்வாறு பாதிக்கக்கூடும்?
02/07/2025 Duration: 12minமத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக அப்பகுதிகள் வழியாக செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தொடரும் இந்த பதற்றம் விமான பயணிகளுக்கு எந்த வகையான பாதிப்புகளை கொண்டுவரும் அதனை பயணிகள் எவ்வாறு சமாளிக்கலாம் போன்ற கேள்விகளுக்கு கடந்த 23 வருடங்களாக Helloworld பயண நிறுவனத்தை பல இடங்களில் நடத்தி வரும் யோஹான் சிவா அவர்கள் வழங்கும் பதில்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: “The Big Penguin”
02/07/2025 Duration: 09minடாஸ்மேனியா மாநிலத்தின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பென்குயின் என்கிற நகரத்தின் வரலாற்றையும், அந்த நகரத்தில் இருக்கும் The Big Penguin சிலையின் வரலாற்றையும், அங்குச் சென்றால் என்னென்ன சுவையான அம்சங்களையெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களை தருகிறார் உயிர்மெய்யார்.
-
விம்பிள்டனில் தனது ஆட்டத்தை வெற்றியுடன் ஆரம்பித்த ஆஸ்திரேலிய வீரர்
01/07/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/07/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
சிட்னியில் காணாமல் போன தமிழ்ப்பெண் கண்டுபிடிப்பு - தந்தை தகவல்
01/07/2025 Duration: 07minசிட்னி நகரின் புறநகர் Auburnனில் வசித்து வரும் 18 வயதான பல்கலைக்கழக மாணவி ஆனிஷா சாதிக் (Aanisha Sathik) அவர்கள் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23, 2025) மதியம் இரண்டு மணி போல் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார், ஆனால் இன்று வரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டு பிடித்துக் கொடுக்குமாறும் அவரது தகப்பன் சாதிக் ஹபீப் மற்றும் அவர் குடும்பத்தவர் விடுத்த உருக்கமான வேண்டுகோளை நாம் முன்னர் எடுத்து வந்திருந்தோம். ஒரு இரயில் ஓட்டுனரின் உதவியுடன் ஆனிஷா சாதிக் அவர்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அந்த விவரங்களையும் ஆனிஷா சாதிக் அவர்களின் குடும்பத்தவரது தற்போதைய மனநிலை குறித்தும் சாதிக் ஹபீப் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்சுலின் ஊசி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி – வேறு வடிவில் இன்சுலின் வரக்கூடும்!
01/07/2025 Duration: 03minநீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் இன்சுலின் மாத்திரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை நீரிழிவு நோயாளிகள் கொண்டு பரிசோதனை செய்யும் நடைமுறை கூடியவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
How home and contents insurance works in Australia - வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் மீதான காப்பீடு: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
01/07/2025 Duration: 08minHome and contents insurance is a safety net many households expect to rely on during difficult times. But it’s also a financial product that even experts can find challenging to navigate. Whether you own or rent your home, understanding your level of cover, knowing what fine print to look out for, and learning how to manage rising premiums can help you make more informed choices as a consumer. - உங்கள் வீடு அல்லது உடமைகளை ஆபத்தில் ஆழ்த்தும் சம்பவங்கள் மனதுக்கு இனிமையானவை அல்ல - ஆனால் அவை அசாதாரணமானவை அல்ல. இதனால்தான் வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் மீதான காப்பீடு அவசியமாகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் காணாமல் போன தமிழ்ப்பெண்- தந்தையின் உருக்கமான வேண்டுகோள்
01/07/2025 Duration: 13minசிட்னி நகரின் புறநகர் Auburnனில் வசித்து வரும் 18 வயதான பல்கலைக்கழக மாணவி ஆனிஷா சாதிக் (Aanisha Sathik) அவர்கள் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23, 2025) மதியம் இரண்டு மணி போல் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார், ஆனால் இன்று வரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டு பிடித்துக் கொடுக்குமாறும் அவரது தகப்பன் சாதிக் ஹபீப் விடுக்கும் உருக்கமான வேண்டுகோளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் Auburn காவல்துறையை அல்லது Crime Stoppers என்ற அமைப்பை 1800 333 000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனிஷா கடைசியாக கருப்பு ஹூட் ஜம்பர், பச்சை நிற கோடுகள் கொண்ட நீண்ட கருப்பு நிற காற்சட்டை, வெள்ளை நிற காலணிகள் மற்றும் தங்க காதணிகள் அணிந்திருந்தார் என்றும் அவர் இரயிலில் பயணம் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
-
'கடுமையாக நடந்து கொள்வது குறித்து விசாரணை' - காவல்துறை உறுதியளித்தது
01/07/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
30/06/2025 Duration: 09minஅரசியலமைப்பின் முகவுரையில் மாற்றம் - விஸ்வரூபம் எடுத்த புது சர்ச்சை; தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள்; மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ - எடப்பாடி பழனிசாமியின் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஊட்டச்சத்து மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு வருகிறது - ஏன்?
30/06/2025 Duration: 08minVitamin B6 அதிக அளவில் உள்ள சில ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்குவதில் கட்டுபாட்டை பரிந்துரைக்கும் ஒரு இடைக்கால அறிக்கையை Therapeutic Goods Administration (TGA) வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
'காலவரையற்ற தடுப்புக்காவல் தொடர்பிலான உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அரசு விரக்தியடைந்துள்ளது'
30/06/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
செக்ஸ் - கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்: பாலியல் தொற்றுகள்
29/06/2025 Duration: 15minடாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் பாலியல் தொற்று நோய்கள் குறித்து அவர் விளக்குகிறார். தொடரின் ஆறாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
This slur was used to abuse Concetta's father. For her, it's a proud identity - ஆஸ்திரேலியாவில் குடியேறிய இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களின் சவால்களும் சாதனைகளும்!
29/06/2025 Duration: 08minThe term was used as an insult towards Greek and Italian migrants who arrived after the Second World War. But the generations that follow have reclaimed 'wog', redefining their cultural identity. - 'Wog' என்பது மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இன அவதூறு சொல்லாகும். 'Wog' என்று முத்திரை குத்தப்பட்ட இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களில் சிலர் அதனை அவதூறாகக் கருதாமல் பெருமையுடன் தன்னை 'wog' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
27/06/2025 Duration: 04minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (22 –28 ஜூன் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 28 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
உங்கள் துணையை ஆஸ்திரேலியா வரவழைப்பதற்கான விசா: நீங்கள் கவனிக்க வேண்டியவை
27/06/2025 Duration: 14minஆஸ்திரேலியாவுக்கான விசா தொடர்பிலும் இதற்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் நாளை (ஜூலை 1) வரும் மாற்றங்கள் என்ன?
27/06/2025 Duration: 11minஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் (July 1, 2025 – June 30, 2026) எனும் புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. இந்த மாற்றங்கள் என்ன என்று செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
27/06/2025 Duration: 08minயாழ்.செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி அணையா விளக்கு போராட்டம்; இலங்கை வந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வருகை; ஈரான் இஸ்ரேல் மோதல் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
‘ஈரானை சீண்டினால், மீண்டும் அமெரிக்காவைத் தாக்குவோம்’ - Ayatollah Ali Khamenei
27/06/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.