Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 96:42:14
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • முடி கொட்டுதல் & வழுக்கை: தீர்வு என்ன?

    19/06/2025 Duration: 08min

    ஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது? இதற்கு தீர்வு என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து சந்தித்து உரையாடியவர்: றைசெல். முதலில் பதிவான நாள்: 11 June 2018. இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பதை விரைவில் முடிவு செய்வோம் – அதிபர் Trump

    19/06/2025 Duration: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/06/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • செருப்புத் தைப்பவர் ‘குருஜி' ஆகிறார்

    18/06/2025 Duration: 11min

    Oh My Guruji

  • செருப்புத் தைப்பவர் ‘குருஜி' ஆகிறார்

    18/06/2025 Duration: 11min

    Kulture Shock என்ற குழுவினர் சமூகப் பிரச்சனைகளுக்குக் கலை வடிவம் கொடுத்து வருகிறார்கள். அந்த அமைப்பின் அவினாஷ் தனபாலன் மற்றும் பவித்ரா நடராஜன் ஆகியோர், அவர்களின் முதல் படைப்பான, “Oh My Guruji” என்ற நாடகம் குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள்.

  • உலகில் வாழச் சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலிய நகரங்களுக்கு எந்த இடம்?

    18/06/2025 Duration: 02min

    The Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான most liveable cities - உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • தொழில் முனைவோரான ஒரு அகதியின் கதை!

    18/06/2025 Duration: 11min

    அகதிகள் வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து தற்போது தொழில் முனைவோராக வளர்ந்து வரும் செல்வேந்திரன் தனுஷாந்த் தனது வெற்றிக்கதையை பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • தொழில் முனைவோரான ஒரு அகதியின் கதை!

    18/06/2025 Duration: 11min

    அகதிகள் வாரம் ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து தற்போது தொழில் முனைவோராக வளர்ந்து வரும் செல்வேந்திரன் தனுஷாந்த் தனது வெற்றிக்கதையை பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலியா அறிவோம்: Great Ocean நெடுஞ்சாலை

    18/06/2025 Duration: 10min

    Great Ocean Road- என்று பலரும் அறிந்த நீண்ட பெரும் சாலை விக்டோரிய மாநிலத் தலைநகர் மெல்பர்னிலிருந்து 65 கிலோ மீட்டரில் உள்ள Torquay என்ற இடத்திலிருந்து தொடங்கி, 243 கி.மீ நீளம் கடந்து Allansford என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது. ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க மிக முக்கிய சாலையாக பார்க்கப்படும் Great Ocean Road எப்படி உருவானது, அதன் பாதையில் என்னென்ன சுவையான அம்சங்கள் உள்ளன என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் உயிர்மெய்யார்.

  • Albanese- Trump இடையிலான நேரடி சந்திப்பு ரத்து- பின்னணி என்ன?

    18/06/2025 Duration: 06min

    G7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    18/06/2025 Duration: 07min

    தமிழ்நாட்டில் ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்; கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்; ஈரான் - இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசின் அறிவுறுத்தல்; இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தொடர்ந்து கைது செய்யப்படும் வங்கதேசிகள்; ஏர் இந்தியாவின் பல சர்வதேச விமானங்கள் ரத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • இஸ்ரேல்-ஈரான் மோதல் - பொறுமை இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்!

    17/06/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • This rural town has grown into a thriving multicultural hub - SBS Examines : பன்முக பாரம்பரிய மையமாக உருவெடுத்து வரும் Dubbo

    17/06/2025 Duration: 08min

    In the central west of New South Wales, Dubbo is home to some of the largest Nepali and Indian communities in the state. - இந்த வருடம், SBS தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பெருமைமிக்க பன்முக கலாச்சார சமூகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

  • விசா ரத்து மற்றும் நாடுகடத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு: பிந்திய தகவல்கள்

    17/06/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளும் ஒரு நபர் அதற்கெதிராக தாக்கல்செய்த வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் முதல்தடவையாக பேசும் அஞ்சல் பெட்டிகளை நிறுவியுள்ள AusPost

    17/06/2025 Duration: 02min

    Australia Post முதன்முறையாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பேசும் அஞ்சல் பெட்டிகளை நிறுவியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இஸ்ரேல்-ஈரான் மோதல் G7 உச்சி மாநாட்டில் ஆதிக்கம் செலுத்தும்

    17/06/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • Fast-Track முறையின்கீழ் பரிசீலிக்கப்பட்டவர்களும், அமைச்சரின் தலையீட்டுக்கான விண்ணப்பமும்!

    16/06/2025 Duration: 13min

    விசா நிராகரிக்கப்பட்டவர்கள் Ministerial Intervention எனப்படும் அமைச்சரின் தலையீட்டைக் கோரி விண்ணப்பிப்பது தொடர்பில் கேள்விப்பட்டிருப்போம். அதுகுறித்த விரிவான தகவல்களை வழங்குகிறார் மெல்பனைச் சேர்ந்த சட்டத்தரணி மரியம் நளிமுடீன் அவர்கள். அவருடனான நேர்காணலின் இரண்டாவது பாகம் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • விசா நிராகரிக்கப்பட்டவர்கள் அமைச்சரின் தலையீட்டைக் கோரும்போது கவனிக்க வேண்டியவை!

    16/06/2025 Duration: 13min

    விசா நிராகரிக்கப்பட்டவர்கள் Ministerial Intervention எனப்படும் அமைச்சரின் தலையீட்டைக் கோரி விண்ணப்பிப்பது தொடர்பில் கேள்விப்பட்டிருப்போம். அதுகுறித்த விரிவான தகவல்களை வழங்குகிறார் மெல்பனைச் சேர்ந்த சட்டத்தரணி மரியம் நளிமுடீன் அவர்கள். அவருடனான நேர்காணலின் முதல் பாகம் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் புகலிடம்: கொள்கை, நடைமுறை மற்றும் தனிமனித தாக்கம்

    16/06/2025 Duration: 11min

    அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் கொள்கை என்ன? ஆரோக்கியராஜின் அனுபவம் என்ன?

    16/06/2025 Duration: 11min

    அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    16/06/2025 Duration: 09min

    இந்திய விமான விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 279 ஆக உயர்வு - விபத்துக்கான காரணம் என்ன?; பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்; பாஜக கூட்டணியை சிதைக்க பார்ப்பதாக பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

page 8 from 38