Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இந்திய பிரதமரின் இலங்கைப் பயணம் – விரிவான தகவல்
06/04/2025 Duration: 06minஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன், வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். குறிப்பாக, இந்திய உதவியில் அமைக்கப்பட்ட நலத் திட்டங்களை மக்களிடம் கையளித்தார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
05/04/2025 Duration: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (30 மார்ச் – 05 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 05 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
How to vote in the federal election - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
04/04/2025 Duration: 09minOn election day the Australian Electoral Commission anticipates one million voters to pass through their voting centres every hour. Voting is compulsory for everyone on the electoral roll, so all Australians should familiarise themselves with the voting process before election day. - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் 4 வாரங்களே உள்ள பின்னணியில், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!
04/04/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
04/04/2025 Duration: 08minஇந்திய பிரதமர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இலங்கை வருகிறார்; சூடுபிடிக்கும் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார பணிகள்; ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சில அரசியல் தலைவர்கள் கைது; தொடரும் விசாரணைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
MCG மைதானத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது
03/04/2025 Duration: 05minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 04 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தின் உருவாக்கமும் பின்னணியும்
03/04/2025 Duration: 07minஇசைக்கச்சேரிகள் முதல் திருமணங்கள் வரை நாதஸ்வரம் எனும் இசைக்கருவி தமிழர்களின் வாழ்வில் இணைந்திருக்கிறது. அப்படியான நாதஸ்வரம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நரசிங்கம்பேட்டையில் உருவாக்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீட்டைக் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வர உருவாக்கத்தின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிராபாகரன்.
-
அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரி ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?
03/04/2025 Duration: 08minஅமெரிக்கா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய பொருட்கள் மீது 10 சதவீத வரி அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியாவில் எந்த நகரங்களில் அதிகமானோர் குடியேறுகின்றனர்?
03/04/2025 Duration: 02minநாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஜுன் வரையிலான 12 மாதங்களில் கூடுதலாக 4,30,000 பேர் குடியேறியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிகரெட் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய மாற்றம்!
03/04/2025 Duration: 02minஒவ்வொரு சிகரெட்டிலும் உடல்நலம் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை செய்திகள் அச்சிடும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உங்களுக்கு எல்லாமாய் இது!
03/04/2025 Duration: 12minமனித இயந்திரத்தைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மருத்துவர் டாக்டர் பாலாஜி பிக்சாண்டி, முதியவர்களுக்கும் புனர்வாழ்வு தேடுபவர்களுக்கும் உதவும் வகையில் அவற்றைப் பயன்படுத்த ஒரு சர்வதேச முயற்சியில் இறங்கியுள்ளார். அவரை 2018ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
இறந்தவர்களின் superannuation நிதியை திரும்ப தருவதில் ஏன் தாமதம்? - ASIC கேள்வி
03/04/2025 Duration: 06minSuperannuation துறையில் claim விண்ணப்பங்கள் பரிசீலனையில் நிலவும் கூடுதலான தாமதங்கள் மற்றும் மோசமான வாடிக்கையாளர் சேவை போன்றவை சமீபத்திய ASIC-இன் மதிப்பாய்வு அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் 34 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
03/04/2025 Duration: 09minஇந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, திருப்பூரில் கல்லூரி மாணவி ஆணவப்படுகொலை, கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு உள்ளிட்ட உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
புகலிடக் கோரிக்கையாளர் இருவரின் முறையீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது!
03/04/2025 Duration: 07minஇரு புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை அகதி என்று Adminstrative Appeal Tribunal (AAT ) ஏற்றுக்கொண்ட பிறகும் தாங்கள் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்குகள் நிராகரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய பொருட்களுக்கும் புதிய வரியை அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்தார்!
03/04/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
மியான்மார் நிலநடுக்கம்: நடந்ததையும், நடக்கவேண்டியதையும் விவரிக்கிறார் பர்மிய தமிழர்!
02/04/2025 Duration: 08minமியான்மார் (பர்மா) நாட்டில் கடந்த வாரம் நடந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். மண்டலே பகுதியில் நடந்த இந்த நிலநடுக்கத்தையும், பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய எதிர்பார்ப்பையும் விவரிக்கிறார் 74 வயது அப்பாவு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
அதீத இரத்தப்போக்கு: ஏன் ஏற்படுகிறது? எப்படித் தடுப்பது?
02/04/2025 Duration: 16minHeavy menstrual bleeding எனப்படும் அதீத இரத்தப்போக்கு காரணமாக அவதிப்படும் பெண்கள் பலர் உள்ளனர். கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதிலுள்ள பெண்களில் நான்கில் ஒருவர் இத்தகைய நிலைமையினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது தொடர்பில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் Women’s Health Road Australia Incorporated (WHRAI)இன் ஏற்பாட்டில் மே 11ஆம் திகதி International Heavy Menstrual Bleeding தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் Heavy Menstrual Bleeding தொடர்பில் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் குடும்ப நல மருத்துவராக கடமையாற்றும் வாணி அர்ஜுனமணி அவர்கள். கூடவே இந்த நிலைமையால் பாதிக்கப்பட் காயத்ரி ஸ்ரீதர் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். இவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தனிப்பட்ட ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
Australian makes history by living with a Titanium heart - உலோக இதயத்துடன் வாழ வைத்து உலக வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா!
02/04/2025 Duration: 16minTotal artificial heart was implanted by an Australian doctor on a patient who made history to be the first person in the world to leave hospital with a titanium heart. The patient lived with the device for more than 100 days before receiving a donor heart transplant. - உலகிலேயே முதல் தடவையாக, ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரால் முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, டைட்டேனிய உலோகத்தாலான இதயத்துடன் ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி வரலாறு படைத்துள்ளார். இதய மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கு ஒரு நன்கொடையாளரின் இதயம் கிடைக்கும் வரை, இந்த நோயாளி 100 நாட்களுக்கும் மேலாக அந்த செயற்கை இதயத்துடன் வாழ்ந்துள்ளார். இது குறித்து, விக்டோரியா மாநிலத்தின் Austin Health இதய அறுவை சிகிச்சை நிபுணரும் இதய அறுவை சிகிச்சை இயக்குனரும் St John of God Geelong, Epworth Eastern மற்றும் Epworth Richmond மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் கடமையாற்றும் Dr சிவேன் சீவநாயகம் அவர்களிடம் குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.
-
ஆஸ்திரேலியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமையுமா?
02/04/2025 Duration: 06minநாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில் இதையொட்டி பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு கருத்துக்கணிப்பின்படி நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அமெரிக்க அதிபர் Donald Trump கூடுதல் வர்த்தக வரிகளை அறிவிக்கவுள்ளார்!
02/04/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.