Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 52:29:28
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • தமிழர் ஒடுக்குமுறை தினம் - கன்பராவில் பேரணி நடத்திய தமிழ் ஏதிலிகள் கழகம்

    04/02/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 05/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • குடும்ப வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவதே இந்நூலின் நோக்கம் -டெபோரா சுகிர்தகுமார்

    04/02/2025 Duration: 11min

    ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட டெபோரா சுகிர்தகுமார், Raising Resilient Families என்ற நூலை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த நூல் 2025 ஆம் ஆண்டு Able Golden Book விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டப்படும் பெயர்கள் எவை தெரியுமா?

    04/02/2025 Duration: 02min

    ஆஸ்திரேலிய மக்கள் தமது குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்களில் மிகவும் பிரபலமானவை எவை என்ற புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையில் உள்ளவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் புலமைப்பரிசில்!

    04/02/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின்கீழ் இலங்கையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் Australia Awards புலமைப்பரிசிலின் 2026ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • குயின்ஸ்லாந்தின் பிரபல சுற்றுலாத் தீவில் சுறா தாக்கி 17 வயதுப் பெண் பலி

    04/02/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • Pink Sari நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்!

    03/02/2025 Duration: 10min

    பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு தினம். இதனை முன்னிட்டு Pink Sari அமைப்பு பிப்ரவரி 9-ஆம் தேதி ஒரு விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நடைபயணம் குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி வெங்கட்ராமனுடன் உரையாடுகிறார் செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    03/02/2025 Duration: 08min

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட் 2025 ஆதரவும் எதிர்ப்பும், ஈரோடு இடைத்தேர்தல் - திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் இறுதி கட்ட பிரச்சாரம் மற்றும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'பெரியார் சர்ச்சை' போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • Donald Trump எடுத்துள்ள முடிவு ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

    03/02/2025 Duration: 08min

    அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு, அமெரிக்க மண்ணில் பிறந்தால் போதும் என்று அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அதனை மாற்றுவேன் என்று Donald Trump கூறியிருந்தார். அதிபர் பொறுப்பேற்ற முதல் நாளே, Executive order என்று அறியப்படும் அதிபரால் விடுக்கப்படும் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து விட்டார்.

  • இணையவழி நியோ- நாஸி வலையமைப்பு மீது நிதித் தடைகளை விதித்த ஆஸ்திரேலியா

    03/02/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • சீனாவின் புதிய DeepSeek AI Chatbot ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எவை?

    02/02/2025 Duration: 11min

    சீனாவின் புதிய DeepSeek AI Chatbot கடந்த வாரம் வெளிவந்து உலகளாவிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய AI Chatbot இந்தளவு பிரபலமாக என்ன காரணம்? இது ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.

  • Important tips for cycling in Australia - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான முக்கிய குறிப்புகள்

    02/02/2025 Duration: 08min

    Riding a bicycle is a common and affordable form of transport in Australia, with people cycling for sport, recreation and to commute. Cycling also comes with some rules to keep all road users safe. - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுவதென்பது ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    01/02/2025 Duration: 06min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (25 ஜனவரி – 01 பிப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 01 பிப்ரவரி 2025 சனிக்கிழமை.

  • ஆஸ்திரேலியாவில் Paracetamol மாத்திரைகளின் விற்பனைக்கு கட்டுப்பாடு!

    31/01/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் Paracetamol மாத்திரைகளின் விற்பனை தொடர்பிலான கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவின் எந்தப்பகுதியில் நில அதிர்வு ஏற்படக்கூடிய அதிக ஆபத்து உள்ளது?

    31/01/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் அதிக ஆபத்துள்ள பூகம்ப மண்டலங்கள் குறித்த மதிப்பீட்டை Geoscience Australia புதுப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • “தமிழருக்கும் பூர்வீக குடி மக்களுக்குமான உறவு மிக நீண்டது”

    31/01/2025 Duration: 19min

    Dr ப்ரியா ஸ்ரீனிவாசன் ஒரு கலை இயக்குனர், நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நூலாசிரியர். இவர் பூர்வீக குடி மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். கலை மூலம் சமூக நீதி பிரச்சினைகளை நோக்கிச் செல்ல கோட்பாடு மற்றும் நடைமுறையை இணைக்கிறார்.

  • நாட்டில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பது குறித்த விமர்சனங்களை பிரதமர் நிராகரித்தார்

    31/01/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள் :31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை.

  • Dementia - மறதிநோய் வராமல் தடுக்க முடியுமா?

    30/01/2025 Duration: 06min

    நாட்டில் பல லட்சம் ஆஸ்திரேலியர்கள் மறதிநோயுடன் வாழ்கின்றனர். நான்கு முக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் மறதிநோய் வருவதை தாமதப்படுத்தலாம் என புதிய மருத்துவ ஆய்வு முயற்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    30/01/2025 Duration: 08min

    எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இரு மீனவர்கள் காயமடைந்துள்ளார்கள். மூத்த தமிழ் தலைவர் மாவை சோனதிராசா மறைந்தார். சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க காணாமலாக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை. அவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • சிட்னியில் வெடிபொருட்கள் நிரம்பிய caravan கண்டுபிடிப்பு: பிந்திய தகவல்கள்

    30/01/2025 Duration: 02min

    சிட்னியின் வடமேற்கிலுள்ள Dural பகுதியில் வெடிபொருட்கள் நிறைந்த ஒரு caravan கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சமையல் நன்றாக வருவதன் ரகசியம் என்ன? - Chef தாமு பதில்

    30/01/2025 Duration: 13min

    தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர்களில் ஒருவர் தாமு அவர்கள். அவருக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சமையல்கலைஞர் தாமு அவர்கள் 2022-ஆம் ஆண்டுஆஸ்திரேலியா வருகை தந்திருந்த போது சமையல் துறையில் அவரின் பயணம் மற்றும் அவர் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து செல்வியுடன் உரையாடியிருந்தார். அந்நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

page 20 from 21