Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 97:45:51
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • நாட்டில் வீடுகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

    02/06/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    30/05/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (25 மே – 31 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 31 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • சிட்னியில் சட்டவிரோதமாக மரக்கழிவுகளை கொட்டிய நபருக்கு 30,000 டொலர்கள் அபராதம்

    30/05/2025 Duration: 02min

    சிட்னி Mount Colahஇல் மரக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய நபருக்கு 30 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்: செக்ஸ் டாயிஸ்

    30/05/2025 Duration: 11min

    டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் Sex Toys பற்றி விளக்குகிறார். தொடரின் ஐந்தாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker

    30/05/2025 Duration: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் தற்கொலையைத் தவிர்க்க வைக்கும் Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    30/05/2025 Duration: 08min

    தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை அடுத்து வடக்கில் சுமார் 6000 ஏக்கர் நில சுவீகரிப்பினை மீளப்பெற்றது இலங்கை அரசு; இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் சுமார் 800 கிலோ போதைப் பொருளுடன் இரு படகுகளில் 11 பேர் கைது; பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள உகந்தைமலை புத்தர் சிலை விவகாரம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • NSW-இல் வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு நிவாரணம் இன்று முதல் வழங்கப்படுகிறது

    30/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இந்த வார உலகம்: அமெரிக்காவுக்கான மாணவர் விசா நிறுத்தம், இனப்படுகொலை தின அனுசரிப்பு

    29/05/2025 Duration: 08min

    மாணவர் விசா நேர்காணலை நிறுத்திய அமெரிக்கா; இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் ராஜாங்க மோதல்; வங்கதேசத்தில் ஜூன் 2026க்குள் தேர்தல்; ரஷ்யா- உக்ரைன் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு; முதல் இனப்படுகொலை நினைவு தினத்தை அனுசரித்த நமீபியா; காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஜூன் 1 முதல் மாணவர் கடன்களில் 20% குறைப்பு

    29/05/2025 Duration: 07min

    ஆஸ்திரேலிய அரசு HECS-HELP மற்றும் பிற மாணவர் கடன்களில் 20% குறைப்பு செய்யும் திட்டத்தை நவம்பர் 2024இல் அறிவித்தது. இந்த குறைப்பு 2025 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • வான்வழியாக, ஆஸ்திரேலியாவின் தொலைதூர இடங்கள் அளவை செய்யப்பட்டது

    29/05/2025 Duration: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய outback என்று சொல்லப்படும் தொலைதூர இடங்களை நிலஅளவை செய்ய ஊக்குவித்த Donald George Mackay குறித்தும், 1930ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட அளவை குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..!

    29/05/2025 Duration: 10min

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அரும்பிய ஆயுர்வேதம் வாழ்க்கை மற்றும நீ்ண்ட ஆயுளுக்கான அறிவியலாகும் என்றும் அதுவே உலகின் மிகவும் பழமையான ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பாகும் எனக் கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வர்மக் கலை பற்றி உரையாடுகிறார் சிட்னியில் ஆயுர்வேத மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் நிக்கிலா வேணுகோபால். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • உள்ளூர் விமானக் கட்டணங்கள் குறைகின்றன

    29/05/2025 Duration: 06min

    விமான எரிபொருளின் விலைகள் குறைவாக உள்ள காரணத்தினால் Domestic Airlines உள்நாட்டு விமானச் சேவைகளின் விமானக் கட்டணங்கள் குறைத்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • சிரிப்பு யோகா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    29/05/2025 Duration: 17min

    யோகாவில் பல வகைகள் இருப்பதை நாம் அறிவோம். இது சற்றுவித்தியாசமான சிரிப்பு யோகா. இதை பல இடங்களில் பரப்பி வருகிறார் சிரிப்பானந்தா. அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • NT காவல்துறை கட்டுப்பாட்டில் உயிரிழந்த பூர்வீகக்குடி இளைஞர்: சுயாதீன விசாரணைக்கு அழைப்பு

    29/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • லிபரல்- நேஷனல் கட்சிகள் மீண்டும் இணைந்தன!

    28/05/2025 Duration: 02min

    லிபரல் கட்சியும் நஷனல் கட்சியும் மீண்டும் கூட்டணியாக இணைந்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கைலாய மலை கிரிவலம் செல்வது எப்படி? : விரிவான தகவல்

    28/05/2025 Duration: 17min

    கைலாய மலையை சுற்றிய பரிக்கரமா(கிரிவலம்) நடை பயணம் சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. கைலாய மலை பரிக்கரமா நடை பயணம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள Touch Kailash Australiaவை சேர்ந்த செல்வராஜ் ராஜேந்திரன் அவர்கள் கைலாய மலைக்கு குழுவாக அழைத்து செல்லும் பணியும் செய்துவருகிறார். கடந்த ஆண்டு கைலாய மலை சென்று திரும்பியுள்ள 15 வயதான தியானா மற்றும் செல்வராஜ் ராஜேந்திரன் இருவரும் SBS ஒலிப்பதிவுக்கூடம் வரை வந்து தங்களின் பயண அனுபவங்கள் மற்றும் கைலாய மலை பயணத்திற்கு எப்படி தயாராக வேண்டும் மேலும் அதில் உள்ள சவால்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக உரையாடுகிறார்கள். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.

  • Would you consider nominating someone for an Order of Australia? - Order of Australia விருதுக்கு ஒருவரை பரிந்துரைப்பது எப்படி?

    28/05/2025 Duration: 09min

    Do you know someone who makes an extraordinary impact in the community? It could be a person from any background or field of endeavour. You can help celebrate their achievements by nominating them for an Order of Australia. The more we recognise extraordinary members within our communities, the more Australia’s true diversity is reflected in the Australian honours list. - எமது சமூகத்திலுள்ள சாதாரண உறுப்பினர்களின் சிறந்த சாதனைகளைக் கொண்டாடுவது ஏன் முக்கியம் என்பது தொடர்பிலும், அவர்களை Order of Australia விருதுக்கு எப்படி பரிந்துரைக்கலாம் என்பது தொடர்பிலும், Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • விக்டோரியாவில் வெட்டுக்கத்திகளின் விற்பனைக்குத் தடை: பின்னணி என்ன?

    28/05/2025 Duration: 06min

    விக்டோரியா மாநிலத்தில், மே 28 புதன்கிழமை மதியம் முதல், Machete எனப்படும் வெட்டுக்கத்திகளின் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    28/05/2025 Duration: 09min

    இந்தியாவில் நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக திமுக- அதிமுக கட்சிகளின் தொடரும் காரசார விவாதம்; சென்னை அடையார் ஆற்றங்கரை பகுதியில் வீடுகள் இடிப்பும், எதிர்ப்பும்; மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் உள்பட பலர் சுட்டுக்கொலை; ஆவணங்களற்ற குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வங்கதேசிகளை நாடுகடத்தியுள்ள இந்தியா உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • NSW வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்

    27/05/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

page 13 from 39