Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
05/06/2025 Duration: 08minரஷ்யா- உக்ரைன் மோதல்; இஸ்ரேல்- காசா போர்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் காரணமாக 3 மௌரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்; அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை; தென் சீனக் கடல் சர்ச்சையில் ஐரோப்பிய யூனியனின் தலையீடும் சீனாவின் கருத்தும்; நைஜீரியாவில் வெள்ளப் பாதிப்பில் 200 பேர் பலி உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Why are migrant women missing out on vital medical tests? - SBS Examines : புலம்பெயர்ந்த பெண்கள் ஏன் முக்கியமான மருத்துவ பரிசோதனைகளைத் தவறவிடுகிறார்கள்?
05/06/2025 Duration: 08minMany people from CALD communities, especially women, are avoiding or delaying preventative cancer care. - பல்வேறு கலாச்சார பின்னணி, மொழி மற்றும் மரபுகளை சேர்ந்த மக்கள் குறிப்பாக பெண்கள் புற்றுநோய் வருவதற்கு முன் அதனை தடுக்கும் வகையில் முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனைகளை செய்யாமல் தவிர்க்கின்றனர்.
-
பிரிந்த பல பெற்றோர் குழந்தை ஆதரவு நிதி கொடுக்காமல் பல கோடி டாலர் பாக்கி வைத்துள்ளனர்
05/06/2025 Duration: 07minஆஸ்திரேலியாவில் இணைந்து வாழும் பெற்றோர் பிரியும் போது அவர்களின் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளில் ஒரு பெற்றோர் மற்றவருக்கு பணம் செலுத்தும் ஒரு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த குழந்தை ஆதரவு அமைப்பு Child Support System குறித்த Commonwealth Ombudsman விசாரணை அறிக்கையில் குழந்தை ஆதரவு அமைப்பில் நிதி முறைகேடு இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
தென்னிந்தியாவின் ஆன்மாவை தத்துவரூபமாக வரையும் ஓவியர் இளையராஜா
05/06/2025 Duration: 12minஓவியர் இளையராஜா என்ற பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். அவர் வரைந்த தத்துவரூபமான திராவிடப் பெண்களின் ஓவியங்களை கண்டிப்பாக நீங்கள் பார்த்து இரசித்திருப்பீர்கள். அவை புகைப்படமா? இல்லை ஓவியமா என்று நண்பர்களுடன் வாதாடியும் இருப்பீர்கள். ஓவியர் இளையராஜா அவர்கள் Covid-19 தொற்று காரணமாக, 2021ஆம் ஆண்டு ஜூன் ஆறாம் தேதி காலமானார். ஓவியர் இளையராஜாவுடன் 2014ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நிகழ்த்திய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
இரவில் நன்றாக தூங்குவதற்கும் நமது உணவுக்கும் தொடர்பு உள்ளதா?
05/06/2025 Duration: 06minஇரவில் நன்றாக தூங்குவதற்கும் நாம் சாப்பிடும் உணவுக்குமிருக்கும் தொடர்பு குறித்து விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இரவில் நன்றாக தூங்குவதற்கும் நமது உணவுக்கும் தொடர்பு உள்ளதா?
05/06/2025 Duration: 06minஇரவில் நன்றாக தூங்குவதற்கும் நாம் சாப்பிடும் உணவுக்குமிருக்கும் தொடர்பு குறித்து விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது : வட்டி வீதம் மேலும் குறையுமா?
05/06/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
சிட்னியில் தொடரும் துப்பாக்கிச் சூடுகளும், படுகொலைகளும்: பின்னணி என்ன?
04/06/2025 Duration: 12minசிட்னி பெரு நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்துவரும் துப்பாக்கிச் சூடுகளும், படுகொலைகளும் பொதுமக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இதற்கான காரணத்தையும், வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் உலக தரவரிசையில் எந்த இடத்திலுள்ளன?
04/06/2025 Duration: 03minபல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலின்படி முதல் 100 இடங்களுக்குள் நான்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How does media work in Australia? - ஆஸ்திரேலியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
04/06/2025 Duration: 12minA free, independent and diverse press is a fundamental pillar of democracy. Australia has two taxpayer-funded networks that serve the public interest (ABC and SBS), plus a variety of commercial and community media outlets. Although publicly funded media receives money from the government, it is unlike the state-sponsored outlets found overseas. - ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு என்ன என்பது தொடர்பிலும், ஆஸ்திரேலியாவில் வர்த்தக ரீதியிலான ஊடகமும் அரச நிதியுதவியுடன் இயங்கும் ஊடகமும் எவ்வாறு வேறுபடுகிறது என்பது தொடர்பிலும், Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஏன் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா வருகின்றனர்? ஏன் பல இந்திய பல்கலைக்கழகங்கள் இங்கு ஏற்கப்படுவதில்லை?
04/06/2025 Duration: 17minஇந்தியாவின் உளவியல் துறை (Psychology), ஆற்றுப்படுத்தும் கலை (Counselling), மற்றும் இந்தியக் கல்வி முறை பற்றி உரையாடுகிறார் பேராசிரியர் பஞ்ச். இராமலிங்கம் அவர்கள். அவர் இந்தியாவின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள UGC–Malaviya Mission Teacher Training Centreயின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியில் 28 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க அவர் உளவியல் துறையில் முனைவர் பட்டம் உட்பட பல பட்டங்களை பெற்றவர். உளவியலில் முன்னணி நிபுணராக, 110க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பஞ்ச். இராமலிங்கம் அவர்கள் கலைமாமணி, Cal Catterall Award உள்ளிட்ட பல சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமா?
04/06/2025 Duration: 05minஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கூற்றை பிரதமர் Anthony Albanese நிராகரித்துள்ளார். இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
04/06/2025 Duration: 07minதமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு; டெல்லியில் தமிழர்கள் வாழ்ந்து வந்த மகராசி கேம்ப் பகுதி இடிப்பு; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு; வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு; ஆப்ரேஷன் சிந்தூர்: சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்த கோரிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது
04/06/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
Alfred and Clinton are unlikely friends. Their friendship can teach migrant communities about reconciliation - SBS Examines : நல்லிணக்கப் பயணத்தில் குடிபெயர்ந்த சமூகங்களின் பங்கு என்ன?
03/06/2025 Duration: 08minAlfred is an Indonesian migrant, and Clinton is an Aboriginal man from Western Australia. Their friendship changed the way Alfred understood his identity as a migrant Australian. - Alfred இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், Clinton மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பூர்வீகக்குடியின பின்னணி கொண்டவர். Clinton உடனான நட்பு புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியராக தனது அடையாளத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றியது என்கிறார் Alfred.
-
குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை முதல் சம்பள உயர்வு!
03/06/2025 Duration: 03minஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.5 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கிரீன்ஸ் கட்சி செனட்டர் Dorinda Cox லேபர் கட்சியில் இணைந்தார்
03/06/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஐம்பதாவது ஆண்டு நிறைவில் SBS வானொலி, மன நிறைவில் நேயர்கள்
02/06/2025 Duration: 15minSBS வானொலி தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், பன்முகத்தன்மை கொண்ட மற்றும் அர்ப்பணிப்புள்ள SBS வானொலி நேயர்கள் குறித்து, நான்கு நீண்டகால நேயர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
02/06/2025 Duration: 10minஇந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3700 ஆக உயர்வு; தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்ததாக நடிகர் கமலஹாசனின் சர்ச்சை பேச்சு - கர்நாடகாவில் வலுக்கும் போராட்டங்கள்; அதிமுக கூட்டணிக்கு வந்தால், துணை முதலமைச்சர் ஆக்குவதாக வாக்குறுதி! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி; பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே உச்சகட்ட மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
வீடு வாங்கும்போது நாம் தவறவிடக்கூடாத முக்கிய அம்சங்கள் என்ன?
02/06/2025 Duration: 10minஆஸ்திரேலியாவில் வீடு ஒன்று வாங்குவது என்பது வெறும் கனவு மட்டும் அல்ல அது ஒரு குறிக்கோளாகவும் பார்க்கப்படுகிறது. வீடு ஒன்று வாங்க திட்டமிடும் போது அதற்கு எவ்வாறு நாம் தயாராவது மற்றும் 'Open House ' போன்றவற்றிக்கு சென்று வீடுகளை பார்க்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் Real Estate துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான திரு அரன் கந்தையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.